யாழ் தொண்டமானாறு முதல் மண்முனை வரையான கரையோர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 109.15கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இதற்கென பயன்படுத்திய படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவினை சந்தைப் பெறுமதி சுமார் 32 மில்லியன் ரூபா என நம்பப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் பருத்திதுறை பகுதியில் வசிக்கும் 26தொடக்கம் 28 வயது உடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.