பருத்தித்துறை இளைஞர் விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் கடந்த வாரங்களில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் இன்று பருத்தித்துறை ஹாட்லிக்கு கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டிகளின் வரிசையில் பெண்களுக்கான வலைப்பந்தாடட இறுதி போட்டி வல்வை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நக்கீரன் விளையாட்டுக் கழகம் மோதி நக்கீரன் வி.கழகம் வெற்றி பெற்றது.
சகல போட்டிகளின் முடிவில் முதலாம் இடத்தை வழ்வை விளையாட்டுக் கழகமும், இரண்டாம் இடத்தை பருத்தித்துறை ஜக்கிய விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன.
வல்வை விளையாட்டுக் கழக 57 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படட விளையாட்டுக் கழகத்தின் போட்டியின் ஊடாக பல புதிய வீரர் வீராங்கனை இனங்காணப்பட்டமையை அடுத்து, நீண்ட கால இடை வெளியின் பின்னர் வல்வை .விளையாட்டுக் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.