வல்வையில் பட்டக் காலம் ஆரம்பித்துள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவற்றை கீழேயுள்ள படங்களில் காணலாம். பொதுவாக யாழ்பாணத்தில் வருடத்தின் இறுதியில் பட்டங்கள் வானில் பறக்கவிடப்படுகின்றன.
இது வருடந்தோறும் நிகழும் வடகிழக்குப் பருவப்பெயர்சிக் காலநிலைக்கு (North East Monsoon) அமைவாகவே இடம் பெறுகின்றது. அதாவது இக்காலப் பகுதியில் காற்றானது வடக்கு தொடக்கம் வடகிழக்கு உட்பட்ட திசையில் சுமார் 7 இலிருந்து 27 (Beaufort Scale of Wind force 3 – 6) கடல் மைல்கள் வரையான வேகத்தில் வீசுகின்றன . இதுவே இக்காலப்பகுதியில் பட்டங்கள் விடப்படுவதற்கு ஏதுவாகின்றன.
ஆனாலும் காற்றின் வேகம் கரையோரப்பகுதியிலிருந்து தீபகற்பத்தின் உட்பக்க நிலப் பகுதியைச் சென்றடையும் பொழுது படிப்படியாகக் குறைகின்றது. இதனை காற்றில் விடப்படும் பட்டங்களின் எண்ணிக்கையில் இருந்தே அறிந்து கொள்ள முடிகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
palakumar (srilanka)
Posted Date: December 22, 2017 at 22:24
Nice
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.