கந்தசஷ்டியை முன்னிட்டு கதிர்காமத்திலும் ஏராளமான பக்தர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/11/2013 (வெள்ளிக்கிழமை)
நிகழ்ந்து வரும் கந்தசஷ்டிவிழாவை முன்னிட்டு இலங்கையின் சகல முருகன் ஆலயங்களிலும் விசேட பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன. கந்தசஷ்டியை முன்னிட்டு தென் இலங்கையில் அமைந்துள்ள கதிர்காமம் முருகன் (Kataragama temple, சிங்களம் - කතරගම) ஆலயத்திலும் இன்று சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இன்றைய காலை விசேட வழிபாடுகளில் ஏராளமான தமிழ் மக்கள் இங்கு பங்கு கொண்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. படங்களில் மாணிக்ககங்கையில் அடியவர்களில் சிலர் புனித நீராடுவதையும்,
சிலர் அங்கப் பிரதட்சணை செய்வதையும், மேலும் கதிர்காமத்தின் சுற்றுப்புறங்களையும் காணலாம்.
‘மூர்த்தி சிறிது ஆனால் கீர்த்தி பெரிது’ என கதிர்காம யாத்திரைக்குச் செல்லும் பக்தர்களால் கூறப்படும் கதிர்காமம், தென் இலங்கையில் தமிழர்களின் அடையாளமாகவும், தமிழ் கடவுளான முருகப் பெருமானூடாக இந்து சமயத்தின் வழிபாட்டினையும் இங்கு கோடிட்டுக்காட்டி வருகின்றது.
கி.பி 1100 - 1400களில் அமைக்கப்பட்டதாக கருதப்படும் கதிர்காமம் முருகன் கோவில் தென் இலங்கையின் ஊவா மாகாண பிரதேசத்தில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் திசமாறகம உப அரசாங்க அதிபர் பிரிவின் கீழ் மாணிக்க கங்கைக் கரையோரமாக, கொழும்பில் இருந்து சுமார் 280 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
k.selvam (u.k)
Posted Date: November 08, 2013 at 19:57
fantastic coverage! well done.
special thanks to your web team.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.