நேற்றுமுன்தினம் ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் இலங்கையின் சகல முருகன் ஆலயங்களிலும் தற்பொழுது அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் வழமைபோல் அலை மோதுகின்றது.
கந்தசஷ்டி விரத பூசைகளில் கலந்து கொள்ள வந்த பக்தர்களைப் படங்களில் காணலாம். செல்வசந்நிதி முருகன் ஆலயத்தின் இரண்டாவது வருட மகோற்சவம் எனக் கருதுமளவுக்கு கந்தசஷ்டி விரதம் இங்கு பக்தர்களால் அனுஷ்டிக்கப்படுவது, அதிலும் குறிப்பாக சில பக்தர்கள் இங்கு கோவிலில் தங்கியிருந்து விரதத்தைக் அனுஷ்டிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான சூரசம்காரம் எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.