இதுவரை நிர்மாணிக்கப்பட்டு வந்த "வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கல்யாண மண்டபம்" இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
இன்று காலை 06.00 மணி தொடக்கம் 07.32 மணிவரையான சுபமுகூர்த்ததில் வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபை தலைவர் திரு. தர்மகுலசிங்கம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
முத்துமாரியம்மன் ஆலயத்தில் வழிபாடுகள் மேற்கொண்டதன் பின் அங்கிருந்து சுவாமி படங்கள் எடுத்து வரப்பட்டு மங்கள விளக்கு ஏற்றப்பட்டது.
இறைவணக்கத்தை தொடர்ந்து ஸ்ரீ சோ. தண்டபாணிகதேசிகர் (பிரதமகுரு, வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்) அவர்களும், பிரம்மஸ்ரீ -ப .மனோகரக்குருக்கள் (பிரதமகுரு வல்வை வாலாம்பிகை சமேத வைத்தீஸ்வரர் கோவில்) அவர்களும் வாழ்த்துரைகளை வழங்கினார்கள்.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தவில் வித்துவான்களால் (M.S துளசிபரன், M.S தெட்சணாமூர்த்தி சகோதரர்கள்) மங்கள இசை இசைக்கப்பட்டது. தலைவரினால் தலைமை உரை வழங்கப்பட்டது.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் மற்றும் வல்வை நகரசபை தலைவர் உட்பட்ட பல பிரமுகர்களும், பல பொதுமக்களும் இத்திறப்பு விழாவிற்கு கலந்து கொண்டிருக்கின்றனர்.
முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.