Valvettithurai.org
Facebook Youtube Twitter Youtube TSU
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Event Photos
Photos from us
Event Videos
Videos from us
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Poems
Marine matters
Useful Links
About us
Readers Comments
Live Videos
Contact us
விளம்பரங்கள்
 
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
Typing in Tamil
 
ஊருக்கு உதவுவோம்
We help Valvettithurai
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Event Photos
 
Photos from us
 
Event Videos
 
Videos from us
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

ஆதவன் பக்கம்

பிரசுரிக்கபட்ட திகதி: 05/01/2018 (வெள்ளிக்கிழமை)

எதிர்வரும் வாரத்திலிருந்து எனது எண்ணங்கள், கருத்துக்கள் இந்த வல்வெட்டித்துறை.ORG இணையத்தில் பிரசுரமாகும். ஆக்கங்களை முடிந்தால் வாரம்தோறும்(பிரதி சனிக்கிழமைகள்), முடியாவிட்டால் குறைந்தது மாதம் 2 தடவைகள் வெளியிடவுள்ளேன்.

சிறு வயதிலிருந்தே தந்தையாரின் தமிழையும், குடும்பத்திற்கு அப்பால் நின்று அவர் சமூகத்தில் கொண்டிருந்த ஈடுபாட்டையும் நாள் ஒவ்வொன்றாகப் பார்த்து வந்ததன் தாக்கம் என்னுள்ளும் குடிபெறத் தவறவில்லை..

தந்தையாரைப் போல் தமிழில் உயர் கல்வி கற்கவில்லை என்றாலும், க.பொ.த (சா/த) இல் தமிழில் உயர் சித்தி. 90 களில் தமிழ்சார் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். நெடியகாடு கணபதி படிப்பக வெள்ளி விழா கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதும், அதே காலப் பகுதிகளில் வல்வை சனசமூக சேவா நிலையத்தின் அனுசரணையில் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகையான ‘அலை ஒளி’ யில் நண்பன் ரஞ்சித்துடன் சேர்ந்து ஆசிரியராக இருந்தவை தான் அப்பொழுது நான் எழுத்து உலகில் இருந்தமைக்கான தற்போது என்னிடம் மிஞ்சியுள்ள ஆதாரங்கள். அண்மையில் என்றால், கடந்த வருடம் கம்பர்மலை பாலன் வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக வருடந்தோறும் யாழின் தேர்ந்துடுக்கப்பட்ட விருதுக்கானவர்களில், ஊடகத்துறையில் இருவரில் ஒருவராக எனக்குக்கிடைத்திருந்தது.

உலகில் தற்போதைய மீடியா இளைஞர்கள் கையில் எனபது வல்வைக்கும் விதி விலக்கல்ல. ஆனாலும்  வல்வையைப் பொறுத்தவரை 1980 – 2000 காலப் பகுதியே அதிகளவு வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டு அமைந்துள்ளது. இந்த வரலாற்று நிகழ்வுகளை தற்போதைய இளைஞர்கள் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. இக்காலப் பகுதி நிகழ்வுகள் சிலவற்றை எழுதியுள்ள ஒரு சிலரும் தம்மை முன்னிலைப் படுத்தியும் தமக்கு சார்பாகவுமே பதிவேற்றங்களை நிகழ்த்தியுள்ளனர்.

இதற்கு இன்னொரு காரணம் எனது வயதையொத்த இடைநிலை வயது எழுத்தாளர்கள் என்று எவருமே இல்லை என்பதே ஆகும். வல்வையின் பிரபல எழுத்தாளர்கள் 70 வயதைத் தாண்டியவர்கள். சர்ச்சைக்குரிய எழுத்துக்களை வாதங்களை முன் வைப்பதை தவிப்பவர்கள். ஓரிரு இள வயது எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்களிடம் இருந்தும் நான் எதிர்பார்ப்பது கிடைக்கவில்லை.

தந்தையாரிடம் இருந்து பெற்ற எனக்கு முன்னரான ஊர் நிகழ்வுகள், பிரதான காலப்பகுதியான 1980 – 2000களில் நானே நேரடியாக பார்த்த அனுபவங்கள், கடந்த 6 வருடங்களாக வல்வையில் இடம்பெற்ற கிட்டதட்ட சகல நிகழ்வுகளின் தொகுப்பின் கைவசம், இந்தத் துறையில் சம்பந்தப்பட்ட (ஓரிருவரைத் தவிர்ந்த) உலகின் சகல பாகங்களிலும் உள்ள சகல வல்வையர்களுடன் உள்ள தொடர்பு, பலமான சமூக வலைத் தளப் பின்னணி, எழுத்தாளன் என்ற நாமம் இல்லாமல் எழுதியுள்ள ஏராளமான பக்கங்கள், பல்லாயிரக் கணக்கான புகைப்படங்கள், உலகின் பல நாடுகளுக்கும் சென்று பல இடங்களைப் பார்த்து அங்குள்ள இடங்களையும், மக்களையும் எமது பிரதேசத்துடன் ஒப்பிட்டு நான் எனுக்குள் பெற்றுள்ள விடயங்கள், எழுத்துப் பின்னணியைக் கொண்டுள்ள எனது குடும்ப வட்டம்....என நீழும் ஒரு பட்டியல் எனது எண்ண எழுத்துக்களை தொடர்ந்து நீடிக்க வைக்கும், பலரைச் சென்றடையும் என்பது திண்ணம்.

வரப்போகும் எனது துணிவான கருத்துக்கள் கண்டிப்பாக பல விமர்சனங்களை ஏற்படுத்தும். விழிப்பை ஏற்படுத்தும். விடலைப் பருவத்தில் அலை ஒளியில் நான் எழுதியிருந்த அன்றைய ஆசிரியர் தலையங்கம் ஒன்றே அப்போது வாசகர் வட்டத்தில் பல விமர்சனங்களை முன் வைத்திருந்தது.

விமர்சனங்கள் எனக்குப் பின்னாலோ அல்லது எனது குடும்பத்தாருடனோ வைக்கப்படக்கூட்டாது, மாறாக என் முன்னாள் அல்லது கீழே உள்ள எனது தொடர்புகளினூடாக முன் வைக்கப்பட வேண்டும்.

ஆக்கங்கள் ஊர் என்று ஒரு வட்டத்துக்குள் மட்டும் இல்லாமல் அதற்கு வெளியேயும் – நான் அனுபவத்தில் பார்த்தவை ரசித்தவை,  எமது இனம், எமது மொழி, எனது சமயம், அரசியல், சமூகத்தில் தீர்க்கப்படாதுள்ள விடயங்கள், ஒப்பீடுகள், புலம் பெயர் மக்களின் வாழ்வியல், தமிழ் திரைப்படங்களின் தாக்கம், தமிழக தொலைக் காட்சிகளில் உள்ள மோகம், தற்போதுள்ள சமூக வலைத் தளங்களின் பாவனை, எனது கால் நூறாண்டு கடல் வாழ்வில் நான் கண்டவை பெற்றவை  என நீளும் - எனது அவா.

ஆக்கங்கள் எனும் பொழுது நிழல் படங்கள் பிரசுரிப்பு எனது தவிர்க்க முடியாத ஒன்று. நான் எழுதுவதால் அங்கொன்று இங்கொன்றாக, கட்டுரைகளுக்கு ஏற்றால் போல், சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுடன் கூடிய, எனது படம் உங்கள் முன் தோன்றலாம்.

அதிரூபசிங்கம் மாஸ்டர் மகன், இதைவிட தற்போது எனது பெயருக்கு முன்னால் வரும் டைட்டில் – இவை இரண்டும் காலத்தால் அழிக்க முடியாதவை, கடவுள் கொடுத்த கொடை. இவற்றை விட என்னை விளம்பரப்படுத்த எனக்கு வேறு ஒன்றும் தேவை இல்லை – இதைத்தான் என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் நான் அடிக்கடி கூறிக் கொள்வது.

எனது வேலை சூழ்நிலை, அலைமேல் இருப்பிடம் காரணமாக சில வேளைகளில் ஆக்கங்கள் பிரசுரிப்பது தாமதம் ஆகலாம், ஆனாலும் எழுதுவது தொடர்ந்து கொண்டிருக்கும்

எதிர்வரும் வாரத்திலிருந்து எனது பக்கத்துடன் உங்களைச் சந்திக்கும் வரை,

அதிரூபசிங்கம் ஆதவன்
தொலைபேசி – 00 94 777 64 99 55
மின்னஞ்சல்   - marinerathava@yahoo.com


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
Aravinthan (Sri Lanka) Posted Date: January 09, 2018 at 21:56 
Good initiative Athavan.. we expect your article. Good job.

Kannan (Sri Lanka) Posted Date: January 07, 2018 at 16:05 
ஆவலுடன் காத்திருக்கின்றோம் ஆதவன்
கொழும்பிலிருந்து கண்ணன்

குமுதினி (இலங்கை) Posted Date: January 07, 2018 at 15:32 
வாழ்த்துக்கள் ஆதவன்!

நகுலசிகாமணி & உமா நகுலசிகாமணி (Canada) Posted Date: January 06, 2018 at 09:26 
உங்களின் அநுபவங்களை எழுத்துருவாக்கம் தொடராக எழுதுவதையிட்டு மிக்க மகிழ்ச்சியும், படிப்பதற்கு ஆவலாகவும் உள்ளோம். வாழ்த்துக்கள் பல.

ஆவணக்காப்பகம்
ந. நகுலசிகாமணி & உமா

RAJKUMAR PERIYATHAMBY (canada) Posted Date: January 06, 2018 at 04:09 
சிறப்பு ஆதவன் அண்ணா வாழ்த்துக்கள் ;

Nandakumar (U.A.E) Posted Date: January 06, 2018 at 00:42 
Dear Aaathavan,
I am waiting for your articles. Wish you all for good out come.
Regards
Nandan
Dubai
00917554604101


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
யோகா விழிப்புணர்வு தினமும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் - அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2018 (புதன்கிழமை)
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் வாக்காளர் அட்டை விநியோகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2018 (புதன்கிழமை)
கிழக்காசிய கடலில் மோதி தீப்பற்றிய கப்பல் மாலுமிகளுடன் நீரில் மூழ்கியது
பிரசுரிக்கபட்ட திகதி: 17/01/2018 (புதன்கிழமை)
“வினோத விசித்திரப் பட்டப் போட்டி 2018’ – போட்டியில் பங்கெடுத்த முழுப்பட்டங்களின் படத் தொகுப்பு (மீள்பதிப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2018 (செவ்வாய்க்கிழமை)
Annual kite festival held at Valvettithurai
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2018 (செவ்வாய்க்கிழமை)
பட்டப் போட்டிக்கு வரும்போது விமானிக்கு இடம்தெரியாமையால் கூகுளின் உதவியுடன் பலாலி சென்ற
அமைச்சர்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/01/2018 (செவ்வாய்க்கிழமை)
3 முறை தொடர்ந்து முதல்பரிசு – பிரகாசிக்கும் மகேந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2018 (திங்கட்கிழமை)
மஹி நூடில்ஸ் நிறுவனத்தினரும் பரிசில்கள் வழங்கினர்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2018 (திங்கட்கிழமை)
முதன்முதலாக வெளியூர் பட்டக்கலைஞர்களும் பங்கேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2018 (திங்கட்கிழமை)
இம்முறையும் வெளிநாட்டினர் பட்டங்களை படம்பிடிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2018 (திங்கட்கிழமை)
“வினோத விசித்திரப் பட்டப் போட்டி 2018’ – பரிசளிப்பு விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2018 (திங்கட்கிழமை)
பட்டப்போட்டியில் முதல் 30 இடங்களைப்பெற்ற பட்டங்களும் அதனை செதுக்கியவர்களும்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2018 (திங்கட்கிழமை)
அமைச்சருக்கு பாதுக்காப்பாக வல்வைக்கடலில் கடற்படைக்கப்பல் !!!
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2018 (திங்கட்கிழமை)
வினோத விசித்திரப் பட்டப் போட்டி 2018 – நடுவர்கள் கெளரவிக்கப்பட்டனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2018 (திங்கட்கிழமை)
“வினோத விசித்திரப் பட்டப் போட்டி 2018’ – விருந்தினர்கள் உரை
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2018 (திங்கட்கிழமை)
பறக்கும் மேடையில் மொம்மலாட்டம் முதல் இடத்தை பெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 15/01/2018 (திங்கட்கிழமை)
முதல் 3 இடங்களைத் தட்டிச்சென்ற பட்டங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)
மென்மேலும் வளரும் திறமை - வினோத (வி)சித்திர பட்டப்போட்டியில் பங்கெடுத்த பட்டங்கள் விபரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)
கல்வியில் சிறப்புச் சித்தி பெற்றோர் கெளரவிக்கப்பட்டனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)
வினோத (வி)சித்திர பட்டப்போட்டியில் 58 பட்டங்கள் வானில் பறந்தன
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)
அதிக பாவனையால் கையடக்கதொலைபேசி அலைவரிசை பாதிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)
Valvettithurai Kite Festival 2018 commences
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)
மஹிந்த அமரவீர உதயசூரியன் கடற்கரை வந்தடைந்தார்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)
வினோத (வி)சித்திர பட்டப்போட்டி 2018 - அலைமோதிய பார்வையாளர் கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)
மாபெரும் வினோத (வி)சித்திர பட்டப்போட்டி 2018 ஆரம்ப நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 14/01/2018 (ஞாயிற்றுக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம் - Weekly Photo
 இரண்டு குளங்களில் ஒன்று 
One of the 2 Ponds
இரண்டு குளங்களில் ஒன்று
One of the 2 Ponds
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Jan - 2017>>>
SunMonTueWedThuFriSat
1
2
3
4567
8
9
10
11
1213
14
1516171819
20
21
222324
25
26
27
28
293031    
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
வல்வையில் பொதுநிலங்கள் அதிகரிக்கப்படவேண்டும், திட்டமிடல் மேம்படவேண்டும் – (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
அதிரூபசிங்கம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai