இன்று தமிழ் பேரறிஞர் திரு.கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவுதினமாகும். இதனையொட்டி இச்சிறப்புக் கட்டுரை பிரசுரமாகின்றது. யாழ்பாணத்தின் கரவெட்டியில் திரு.சிவத்தம்பி அவர்கள் பிறந்திருந்த போதும், வல்வையில் மணமுடித்து வல்வையில் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்ததினால் பொதுவாக இவர் ஒரு வல்வையராகவே பொதுவாக அறியப்பட்டிருந்தார்.
கார்த்திகேசு சிவத்தம்பி – பேராசிரியர் – பெருந்தகை தமிழ் அன்னையின் தவப்புதல்வன் வடமாரட்சி கரவெட்டி பிறந்த இஅடம் திருமணமாம் பந்தமதால் புகுந்தவிடம் வல்வெட்டித்துறை. வல்வையின் பிரபல தொழில் அதிபர் காலஞ்சென்ற திரு.s. V நடராசா அவர்களின் மூத்த புதல்வி விமலாதேவி அவர்களை திருமணபந்தமாதால் பற்றிக்கொண்டார்.
கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியை ஆரம்ப கல்விக்களமாக கொண்டிருந்த இவர் தமது உயர்கல்வியின் ஆரம்பத்தை கொழும்பு சகாரா கல்லூரியில் மேற்கொண்டார்.
இலங்கை பல்கலைகழகத்திலே தமிழ் பொருளியல் வரலாறு ஆகிய கற்கை நெறிகளை செவ்வனே மேற்கொண்டு நிறைவு செய்து பொதுக்கலை மானி பட்டத்தைப்பெற்றுக்கொண்டார்.
வித்தியோதய பல்கலைகழகத்திலும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் பணி செய்து தகமை சார் வாழ்நாள் பேராசிரியராக அமைத்து விளங்கினார். இந்த நிலையில் சுவீடன் உப்சாலப் பல்கலைகழகத்திலும், கேம்பிரிட்ஜ் (Cambridge ) பல்கலைக்கழகத்திலும், புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்திலும், விரிவுரைகளை ஆற்றினார். இந்த நிலையில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அவரை உயர் ஆய்வுப் புலமையாளராக அழைத்து சிறப்புச் செய்தது.
அன்னாரது கல்விப் பணிகளை பெருத்த வரையில் பல்கலைக்கழகங்களின் ஒரு முக்கிய தூணாக பல வருடங்கள் திகழ்ந்தார். 17 ஆண்டு காலம் யாழ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேராசிரியர் கிழக்கு பல்கைக்கழகத்திலும் 2 வருடங்கள் பணி ஆற்றினார். அடிக்கடி தமிழகத்திற்கு வருகை தந்து கல்வி நிறுவனங்களின் அழைப்பின் பேரில் சிறப்புரைகள் வழங்கி தமிழ் ஆய்வு புலத்தில் ஆக்கப்பணிகள் புரியும் திரு.சிவத்தம்பி அவர்களின் பலதுறைப் புலமை போற்றத்தக்கது.
தமிழ் பேராசிரியராகவும் பன்மொழி அறிஞராகவும், கலை விமர்சகராகவும் விளங்கியதுடன் அரசியல் அறிவு நிரம்பியவராகவும் திகழ்ந்தார். தமிழ் நாடக வளர்ச்சியில் திரு.சிவத்தம்பியின் பங்களிப்பு பெரிதாகும். கூத்து, நாடகம், அரங்கியல் சார்ந்த செய்திகளை பாடத்திட்டத்தில் கொண்டு வந்தவர் பேராசிரியர் திரு.சிவத்தம்பி அவர்களே.
இவர் பலமேடை நாடகங்களில் நடித்ததுடன் வானொலி நாடகங்களிலும் நடித்துள்ளார். இலங்கையர்கோன் எழுதிய விதானையார் வீட்டில் எனும் தொடர் நாடகத்தில் இவர் விதானையாராக நடித்து பெரும் புகழை ஈட்டிக்கொண்டார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இவர் நுண்கலைத்துறை தலைவராக பணி புரிந்த பொழுது பல்வேறு நாடக முயற்சிகளும் வளர்ச்சியடைந்தன. புதிய நாடக மரபு உருவாகிற்று. வன்னிப்பகுதியில் பழக்கத்திலிருந்த கூத்துக்களும், பிற கலைகளும் வளர்ச்சியடைவதற்காக மாநாடுகள் கருத்தரங்குகளை அடிக்கடி நடாத்தினார்.
தமிழ், இலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழ் இலக்கிய விமர்சனம், தமிழ் நாடகம் தொடர்பான ஆய்வுகள் உலகின் எப்பகுதியில் நடைபெற்றாலும் இவருடைய எழுத்து பணிகள் முக்கிய இடம் பெற்று விளங்கும். பேராசிரியர் இலக்கிய தன்மை என்ற தன்மையில் தமிழ் மொழி இலக்கியம் கவின் கலைகள் சமூகம், மானுடவியல், இலக்கணம், அரசியல் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கிய பலநூல்களை ஆக்கியுள்ளார்.
இவருடைய ஆய்வு திறமைக்குக் புகழுக்கும் காரணமாயிருந்தது இவருக்கு இருந்த மும்மொழி புலமையாகும். தமிழ், ஆங்கிலம், சிங்களம்ஆகிய மும்மொழிகளையும் கற்றுத் தேர்ந்தமையால் இவருக்கு பல வாய்ப்புக்கள் ஏற்ப்பட்டன.
பேராசிரியர் சிவத்தம்பி பாராளுமன்றத்திலே சமகால மொழி பெயர்ப்பாளராக பணி செய்த காரணத்தினால் மொழி பெயர்ப்புத் துறையில் அவருக்கு அனுபவமும் திறமையும் ஏற்ப்பட்டது. இதனாலேயே 1966 இல் கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் மொழி பெயர்ப்பு உரை தொடர்பாக இவர் சமர்ப்பித்திருந்த ஆய்வுக் கட்டுரை சிறப்பிடம் பெற்று விளங்கியது.
பலநாட்டு தமிழ் பேசும் இளைஞர்களும் இவருடைய ஆய்வுகளிலே ஈடுபாடு கொண்டிருந்தமை இவர் கையாண்ட புதுமையான பொருத்தமான கலைச் சொற்களே காரணமாகும்.
திருமணபந்தத்தால் வல்வையம்பதியை வாழ்விடமாக கொண்ட பேராசிரியர் பலவகையான கல்விப் பணிகளையும், சமூகப்பணிகளையும் வல்வையிலே திறம்ப செயற்படுத்தினார். வல்வையையும் தமது சொந்த மண்ணாகவே அமைத்துக் கொண்டார். வல்வை சிதம்பராக்கல்லூரியின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளிலே அதிக நாட்டம் கொண்டவராக, வல்வை மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் அதிகம் ஈடுபாடு கொண்டு விளங்கினார்.
படித்தனன் படித்துக் கொண்டே பல்கலையும் பற்றி பிடித்தனன்
வடித்தணன் தமிழின் செழுமைக்காய் நூல்கள் பலவும் படைத்தனன்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.